tamilnadu

img

பொறியியல் கல்விக்கட்டண உயர்வு இல்லை - தமிழக அரசு

பொறியியல் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டு புதிய கட்டண முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்புதல் சிண்டிகேட் கூட்டத்தில் பெறப்பட்டுள்ளது. விரைவில் புதிய கட்டண விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நியாயமான முறையில் கட்டண உயர்வு நிர்ணயம் செய்யப்படும். நிதிச்சுமையை கருத்தில் கொண்டே கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பரிந்துரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. செமஸ்டருக்கு ரூ10 ஆயிரம் வரை கட்டணம் உயர்த்த வாய்ப்புள்ளது என்று எதிர்பார்த்த நிலையில் அரசு பொறியியல் கல்லூரிகளில் கட்டண உயர்வு இருக்காது என உயர்கல்வித் துறை தகவல் அளித்துள்ளது.