tamilnadu

img

அண்ணா பல்கலை. ஆட்சிமன்ற குழு உறுப்பினரானார் உதயநிதி....

சென்னை:
அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராகதிமுக இளைஞரணி தலைவரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.சட்டப்பேரவையில் பேரவைத்தலைவர் மு. அப்பாவு வெளியிட்ட அறிவிப்பில், அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவில் அலுவல் சாரா உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுள்ளதாக பேரவைத்தலைவர் அறிவித்துள்ளார்.

நாகை மாலி
நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக் கழகத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டமன்ற கட்சித் தலைவருமான வி.பி.நாகை மாலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினராக விடுதலை சிறுத்தை கட்சியின் சிந்தனை செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கோவை பாரதியார் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர்களாக ஈஸ்வரன், காங்கிரஸ் கணேஷ் ஆகியோரும் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.