tamilnadu

img

தீக்கதிர்... ஒருவரிச் செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் சாதி வன்முறை, பெண்ணுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக ராகுல், பிரியங்கா கண்டனம்தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி யுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் நட்சத்திரஓட்டலில் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியாகினர்.

பெங்களூரு சர்வதேச விமான நிலையம் அருகில் புதிய ரயில் நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக, மத்திய அமைச்சர்  பியூஸ் கோயல் டிவிட்டரில் தெரி வித்துள்ளார்.

டோனி விரும்பும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடலாம் என்று என்.சீனிவாசன் தெரி வித்தார்.

கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால் வானகரத்தில் பூ மார்க்கெட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் கடைகளுக்கு வாடகை கேட்பதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. பெற்றோர் ஆர்வமுடன் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தனர்.

புதிய கல்வி கொள்கையின் பரிந்துரையின் படி மனிதவள மேம்பாட்டு துறை பெயர் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றத்திற்கு குடியரசுத் தலைவர்  ஒப்புதல் அளித்தார்.

மத்திய ரயில்வே சார்பில் 2 டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த டிரோன்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கையாள உள்ளனர். ரயில் நிலைய பகுதி, பணிமனை பகுதி போன்ற இடங்களில் வானில் பறக்க விட்டு ரயில்வே சொத்துகளை பாதுகாக்கவும், சந்தேகத்திற்கிடமான குற்றவாளிகளை பிடிக்கவும் இந்த டிரோன்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பயன்படுத்த உள்ளனர்.