இந்தியில் கவிதை சொல்ல வலியுறுத்தி மாணவரை அடித்த ஆசிரியை பணியிடை நீக்கம்
இந்தியில் கவிதை சொல்ல வலியுறுத்தி 3ஆம் வகுப்பு மாணவனை அடித்த இந்தி ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட் டார். மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி தொகையை விடுவிக்க மாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாஜகவை தவிர்த்து அத்தனை கட்சிகளும் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத் தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்தியில் கவிதை சொல்ல வலியுறுத்தி மாணவரை இந்தி ஆசிரியை கடுமையாக அடித்து தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி யில் பத்மலட்சுமி (38 ) என்பவர் இந்தி ஆசிரிய ராக பணியாற்றி வருகிறார். இந்தப் பள்ளி யில் தமிழ், ஆங்கிலம் இந்தி ஆகிய பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இந்நிலை யில் 3ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு இந்தி கற்பதிலும், படிப்பதிலும் சில சிக்கல் கள் இருந்திருக்கின்றன. இந்த சூழலில் 3ஆம் வகுப்பு மாணவரை இந்தியில் கவிதை சொல்லுமாறு பத்ம லட்சுமி கூறி இருக்கிறார். அப்போது அந்த மாணவர் இந்தியில் கவிதை சொல்ல முடி யாமல் திணறியதாக கூறப்படுகிறது. இதனால் கோபடைந்த அந்த ஆசிரியை மாண வரை கடுமையாக அடித்திருக்கிறார். மேலும் பள்ளிக்குள் விடமாட்டேன் என்றும் மிரட்டி தொடர்ந்து அடித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவரின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் இந்தி ஆசிரியை மீது புகார் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து இந்தி ஆசிரியை பத்ம லட்சுமி பணி இடைநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.