அம்பத்தூர், ஜூன் 16- அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மண்ணூர்பேட்டை நேரு நகர் 4ஆவது தெருவில் வசித்தவர் பால கிருஷ்ணன் (32). இவர் சென்னை மாநாகரட்சி அம்பத்தூர் மண்டலம் 7இல் ஒப்பந்த அடிப்படையில் துப்புறவு தொழிலாளியாக கடந்த 15 வருடங்களாக வேலை செய்து வந்தார். இவர் வழக்கம் போல் சனிக்கிழமை 91ஆவது வார்டில் தனது வேலையை செய்து முடித்தார். வாவின் சிக்னல் அருகே இரவு நேரங்களில் சில தனியார் நிறுவனங்கள் குப்பைக் கழிவுகளை கொட்டிச் செல்வதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து அலுவலர் டேவின் என்பவருடன் பாலகிருஷ்ணன் சனிக்கிழமை இரவு யாராவது குப்பைக் கழிவுகளை கொட்டுகிறார்களா? என கண்காணிக்க சென்றுள்ளார். இரவு 2 மணியள்வில் பணி முடிந்து வீட்டிற்கு மோட்டார் பைக்கில் புறப்பட்டுச் சென்றுள்ளார். அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த கார் பாலகிருஷ்ணன் மோட்டார் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணனை சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை பணிக்குச் செல்லாமல் மண்டல அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டல அதிகாரி பரந்தாமன், உதவி பொறியாளர் ரமேஷ், துப்புறவு மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்க மண்டல செயலாளர் ஆர்.குப்புசாமி, நிர்வாகிகள் சாந்தி, ஜீவா, சின்னைய்யா, மாரியப்பன், சுப்பிரமணி ஆகியோருடன் பேச்சுநடத்தி னார். அப்போது பலியான பாலகிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவ தாகவும், நிதி உதவி அளிப்பதாகவும் உறு தியளித்தனர். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இந்த போராட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. உயிரிழந்த பால கிருஷ்ணனுக்கு ஐஸ்வர்யா என்ற மனை வியும், லோகு கீர்த்தி (4) வர்த்தினி (2) என்ற குழந்தைகளும் உள்ளனர்.