ஏ.எம்.விக்கிரமராஜா தகவல்
சென்னை, ஜூன் 11- சென்னையில் கொரோனா தொற்று பர வலை தடுக்க முழு பொது முடக்கம் அமல்படுத்தினால் வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு அளிக்கும் என அதன் தலைவர் ஏ.எம்.விக்கிர மராஜா தெரிவித்துள்ளார். தலைமைச் செயகத்தில் நிதித்துறை செயாளர் கிருஷ்ணனிடம் கோரிக்கை மனு அளித்த பின் செய்தி யாளர்களிடம் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது: கோயம்பேடு சந்தை உள்ளிட்ட அனைத்து காய் கறி சந்தைகளையும் கட்டுப் பாடுகளுடன் திறக்க அனு மதிக்க வேண்டும், அறநிலை யத்துறை மற்றும் உள் ளாட்சித்துறைக்கு சொந்த மான கட்டிடங்களில் உள்ள கடைகள் ஏப்ரல், மே இரண்டு மாதங்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதால் வாடகை களை இரண்டு மாதத்திற்கு ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு அறிவித் துள்ள நிவாரண நிதி உதவி கள், வங்கி கடன்கள் எளிமை யாக அடித்தட்டு வணிகர்க ளுக்கும் சென்றடையும் வழி முறைகள் எட்டப்படுவதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வண்டி களில் நேரடியாக வீடு களுக்கு காய்கறி விநியோ கம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்துள்ள நிலை யில், காவல்துறையினர் இடையூறு செய்வதை தடுக்க வேண்டும். வணிகர்கள் மீதான அரசு அதிகாரிகளின் அத்துமீறல்க ளும், கடை சீல்வைப்பு, போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். வணிக நிறுவ னங்கள், கடைகள், உணவ கங்கள், டீக்கடைகள், நடத்து வதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட்டு, அவைகள் இயங்கிட கூடுதல் கால நீட்டிப்பு வழங்க வேண்டும், திருமண மண்பங்களை முறையான கட்டுப்பாடுகளு டன் இயங்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி யுள்ளோம். கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் மிக வேகமாக பரவிவரும் நிலை யில், தமிழக அரசு உத்தர விட்டால் 15 நாட்கள் கடை களை அடைக்க தயாராக உள்ளோம் இவ்வாறு அவர் கூறி னார்.
செங்குன்றம்
சென்னை புறநகர்ப் பகுதியான செங்குன்றத்தில் கொரோனா பாதிப்பு அதிக ரித்து வருகிறது. இதனை யடுத்து வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் கடைகளை மூட வணிகர்கள் முடிவு செய் துள்ளனர். செங்குன்றம் பகு தியில் 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் உயிரி ழந்திருப்பது குறிப்பிடத் தக்கது.