tamilnadu

பதிவேட்டில் விபரங்களை புதுப்பிக்காததால் 11 ஆயிரம் மருத்துவர்கள் தகுதி நீக்கம் மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு

சென்னை, ஜூன் 2-70 வயதுக்கும் மேற்பட்ட 11 ஆயிரம் மருத்துவர்கள், தங்களது விபரங்களை புதுப்பித்துக் கொள்ளாததால் அவர்கள் மருத்துவம் செய்வதற்கு தகுதி அற்றவர்கள் என்று தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில், ஒரு லட்சத்து 38 ஆயிரம் மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் 70 வயதுக்கும் மேற்பட்டோர்15 ஆயிரம் பேர். 90 வயதைத் தாண்டியும் பல மருத்துவர்கள் உள்ளனர்.அவர்கள் தொடர்ந்து மருத்துவப் பணிகளை மேற்கொள்ள உரிய ஆவணங்களுடன் மருத்துவக் கவுன்சிலின் பதிவேட்டில் தங்களது விவரங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறுஅறிவிக்கப்பட்டது. இதற்கு மார்ச் இறுதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அவ்வாறு பதிவு செய்வோர் மட்டுமே தொடர்ந்து மருத்துவப்பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், 70 வயதுக்கு மேற்பட்ட 11 ஆயிரம் மருத்துவர்கள், இந்தப் பதிவேட்டில் தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளவில்லை என்று மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. அணுக முடியாத மற்றும் செயலற்ற சூழலில் அவர்கள் இருப்பதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர்களது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.அதில் 300 பேர் காலமாகி விட்டதாகஅவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.நடத்தை விதிகளை மீறி இணையதளத்தில் விளம்பரம் செய்ததாக 78மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களுக்கு எதிரான நடவடிக்கையும் துவங்கப்பட் டுள்ளது.இதனிடையே சேலம் ஆரோக் கியா மருத்துவமனை மருத்துவர் அறிவுக்கரசி, மகப்பேறு மருத்துவம் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட துர்கா என்றபெண் கருப்பை அகற்றப்பட்டதால் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டப் பட்டது.2016ஆம் ஆண்டிலும் இவர் மகப்பேறு சிகிச்சை மேற்கொண்ட போது பெண் ஒருவர் உயிரிழந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த இரு புகார்களிலும் அவருக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. தற்போது அவர் மீதானபுகார் மீது விசாரணை நடப்பதால்மகப்பேறு சிகிச்சை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.