tamilnadu

img

மயானத்திற்குப் பாதை இல்லாததால் வயலில் உடலைச் சுமந்து சென்ற அவலம்

மயானத்திற்குப் பாதை இல்லாததால் வயலில் உடலைச் சுமந்து சென்ற அவலம்

கள்ளக்குறிச்சி, ஜன. 12- உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குச்சிப்பாளையம் கிராமத்தில் 83 வயதான குப்பு என்ற மூதாட்டி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். அந்த கிராமத்தில் சுடுகாட்டிற்குப் பாதை இல்லாததால், உறவினர்கள் மூதாட்டியின் உடலை நெல் வயலில் சுமந்து சென்றனர். சனிக்கிழமை உயிரிழந்த குப்பு வின் உடலை அடக்கம் செய்ய ஞாயிற்றுக் கிழமை எடுத்துச் சென்றபோது, மயானப் பாதையைச் சிலர் ஆக்கிரமிப்பு செய்து நெல் பயிரிட்டுள்ளதால் அந்த வழியாகச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி நெல் வயலில் உடலைத் தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அவல நிலை நீடிப்பதாகக் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானத்திற்குப் பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.