முறைசாரா தொழிலாளர் சங்க கிளை உதயம்
சென்னை, மே 5 -சென்னை மற்றும் புறநகர் முறைசாரா தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை, மதுரவாயல் பகுதி, வானகரம் மேட்டுக்குப்பத்தில் சனிக்கிழமையன்று (மே 4) உதயமானது. இந்நிகழ்வில் தென்சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் வி.செந்தில்குமார், துணைச் செயலாளர் வி. தாமஸ், பகுதித் தலைவர் துளசி, பகுதி நிர்வாகி ஜி.ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கிளையின் கவுரவத் தலைவராக ஜி.சங்கரன், தலைவராக தங்ககாமாட்சி, செயலாளராக ஈஸ்வரி, பொருளாளராக பிரசாந்த் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
காலமானார்
சென்னை, மே 5 -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மின்னரங்க மத்தியச் சென்னை இடைக்குழு செயலாளரும், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளருமான எம்.தயாளன் தந்தை ஏ.மணவாளன் ஞாயிறன்று (மே 5) காலமானார். அவருக்கு வயது 80.அவரது உடல் எண் 27/12, கட்டபொம்மன் தெரு, காந்திஜி நகர், குரோம்பேட்டை, சென்னை-44 என்ற முகவரியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.அன்னாரது உடல் திங்களன்று (மே 6) காலை 9 மணி அளவில் குரோம்பேட்டை (எம்ஐடி பாலம்) மின்மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.