சென்னை, ஜூன் 18- வட மேற்குத் திசையில் காற்று வலுவாக வீசுவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பம் அதிகரித்துக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகம் பதிவாகக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் வெப்பம் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட் டுள்ளது. அனல் காற்றும் வீச வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அடுத்த இரண்டு தினங்களுக்கு வெளியில் செல்வதை தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பசார், தேவாலா ஆகிய இடங்களில் தலா 2 செ.மீட்டர் மழை பதிவாகியிருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.