சென்னை:
கடந்த ஒரு வாரத்தில் கோவை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாகவே பதிவாகி இருந்தது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே குறைந்து வந்தது. ஊரடங்கு காரணமாக நோய் தொற்று குறையத் தொடங்கியது. மே மாத இறுதிவரையில் தினமும் 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக கொரோனாவின் தாக்கம் குறைந்தது. கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் நோயின் தாக்கம் குறைவாகவே இருந்து வந்தது.இருப்பினும் அவ்வப்போது சில மாவட் டங்களில் முந்தைய நாள் ஏற்பட்ட பாதிப்பை விட தினசரி தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவாரூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 11 மாவட் டங்களில் தினசரி பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் கோவை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாகவே பதிவாகி இருந்தது.பொது மக்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் உள்ளனர். முகக் கவசம் அணியாமல் வெளியில் சுற்றுவது, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கூடுவது ஆகியவையும் அதிகரித்துள் ளது. இதன் காரணமாகவே நோய் தொற்று திடீரென அதிகரித்து இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில் சென்னையில் நோய் தொற்று அதிகரிக்காமல் குறைந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.