tamilnadu

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தக்கோரி வழக்கு பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,மே 16-பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று கோரி தொடுத்த வழக்கில் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபி கிருஷ்ணன் என்பவர், பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ், சிசிடிவி பொருத்த வேண்டுமென்று உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கடந்த பிப்ரவரி மாதம் கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனமொன்றில் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் வாகனத்தில் வந்த நான்கு வயது மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். இது போன்ற சம்பவங் களால் பள்ளிக் குழந்தைகளின் பாது காப்பு கேள்விக்குறியாகி உள்ளது.இது போன்ற குற்றங்களைத் தடுக்கவும், பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யவும் பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக, தமிழக அரசிடம் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை மனுஅளித்தேன். ஆனால் இதுவரை எனதுகோரிக்கை மனு மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என்று மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை, விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறைச் செய லாளர் நான்கு வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைக்கப்பட்டது.