மதுரை, ஜன.4- கல்லணையின் கிழக்கு, மேற்கு பகுதி களில் 15 கிலோ மீட்டருக்குள் இயங்கும் குவாரிகள் செயல்படுவதற்கு உயர்நீதி மன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. இதுகுறித்து திருச்சி லால்குடி கொள்ளி டத்தை சேர்ந்த சண்முகம் என்பர் உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடுத்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “திருச்சி, கல்லணை மற்றும் அதைச் சுற்றி யுள்ள பூதலூர், லால்குடி உள்ளிட்ட பகுதி களில் சட்டவிரோதமாக மணல் எடுக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு மணல் எடுப்பது தொடர்ந்தால் கல்லணை சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால் டெல்டா மாவட் டங்களில் விவசாயம் முழுவதுமாக பாதிக் கப்படுவதுடன், அப்பகுதி மக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவர். ஆகவே கல்லணையில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 15 கிலோ மீட்டர் தொலை வில் மணல் எடுக்க இடைக்கால தடை விதிப்பதோடு, அப்பகுதிகளில் குவாரி நட வடிக்கைகளை மேற்கொள்ள முற்றிலுமாக தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன் பாக புதனன்று நடைபெற்றது. அரசுத்தரப்பில், “அப்பகுதியில் 4 அரசு குவாரிகள் செயல்படுவதாகவும், உரிய அனுமதி பெற்று குவாரி இயங்கி வருவ தாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “ அனுமதி பெற்று இயங்கினாலும், விதிகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சுதந்தி ரமான விசாரணை அமைப்பு விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும். வழக்கு தொடர்பாக அரசுத்தரப்பில் ஜனவரி - 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை கல்லணையின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் 15 கிலோ மீட்டருக்குள் இயங் கும் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்ட னர். வழக்கு ஜனவரி - 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.