மதுரை, பிப்.1- கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ராய னூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வர் ஹரினா.இவர் உயர்நீதிமன்ற மது ரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: என் பெற்றோர் இலங்கையை சேர்ந்த வர்கள். அவர்கள் இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்ற போது தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தவர்கள். நான் கரூர் கோடாங்கிபேட்டை அரசு மருத்துவமனை யில் 2002 இல் பிறந்தேன். கரூரில் பள்ளி படிப்பையும், கோவையில் கல்லூரி படிப் பையும் முடித்தேன். தற்போது வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளேன். இதனால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் நான் இந்திய பிரஜை இல்லை என்று கூறி எனது விண்ணப்பத்தை நிராக ரித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலு வலர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்து எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு புதனன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தர வில், பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 20-இல் இந் திய பிரஜை அல்லாதவர்களுக்கு பாஸ் பார்ட் வழங்குவது குறித்து கூறப்பட்டுள் ளது. அதில் பொதுநலன் கருதி ஒன்றிய அரசு நினைத்தால் இந்திய பிரஜை இல்லா தவர்களுக்கும் பாஸ்போர்ட் வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் வெளிநாட் டுக்கு வேலைக்கு செல்வதற்காக பாஸ் போர்ட் கேட்டு வந்துள்ளார். இதனால் மனுதாரருக்கு பாஸ்போர்ட் சட்டம் 1967 பிரிவு 20-இன் கீழ் பாஸ்போர்ட் வழங்க வேண்டும். மனுதாரர் பாஸ்போர்ட் கோரி விண்ணப் பிக்க வேண்டும். அவரது விண்ணப்பத்தை ஒன்றிய உள்துறை செயலாளர் பரிசீலித்து விரைவில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண் டும் என்று உத்தரவிட்டார்.