tamilnadu

img

தேர்தல் ஆணையம் முழுமையாக தோல்வியடைந்துள்ளது சென்னையில் சந்திரபாபு நாயுடு சாடல்

சென்னை, ஏப்.16-அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம் என ஆந்திர முதல் வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செவ்வாயன்று(ஏப்.16) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“தமிழகத்தில் ஆண்டு கொண்டிருப்பது ஏடிஎம்கே அல்ல மோடிஎம்கே” என்று விமர்சித்தார்.ஜனநாயகம் ஆபத் தான நிலையில் உள்ளது. அதிமுகவிற்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது பாஜகவிற்கு வாக்களிப்பதற்கு சமம் என்றும் அவர் தெரிவித்தார்.பிரதமர் மோடி நாட் டுக்கு துரோகம் செய்கிறார். தில்லியில் தமிழக விவசாயிகள் போராடியபோது பிரதமர் மோடி சந்தித்து பேசினாரா? என்றும் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பினார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யமுடியும் என்று கூறிய சந்திரபாபு நாயுடு, ஜெர்மனி , இத்தாலி, நெதர்லாந்து போன்ற வெளி நாடுகளில் எல்லாம் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டதாக குறிப்பிட்டார்.


முதல் கட்டமாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விவிபேட் இயந்திரத்தில் ஒப்புகைச்சீட்டு, ஏழு நொடிகளுக்கு பதிலாக மூன்று நொடிகள் மட்டுமே தெரிந் துள்ளது என்றும், இதுகுறித்து தற்போது வரை தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு மத்திய அரசு பல்வேறு நாடகங்களை நடத்தி வருகிறது. மோடி அரசின் கைப்பாவையாக அதிமுக அரசு மாறிவிட்டது.ஜனநாயகத்தை காப் பாற்ற அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டியுள்ளது என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.மத்தியில் ஆட்சியமைப்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதான பங்காற்ற போகிறார் என்றும் அவர் குறிப் பிட்டார். ஸ்டாலினை முதலமைச்சராக பார்க்க தமிழக மக்கள் விரும்புவதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.