tamilnadu

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு செலவினத் தொகையாக ரூ.200

சென்னை, மே 17- கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் பணி யாற்றும் நியாயவிலைக் கடை ஊழியர் களுக்குச் செலவினமாக நாளொன் றுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத் தும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசு, அதன் பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் ஊரடங்கை அறிவித்துள்ளது. அத்தியாவசிய பொருள்கள் பெறு வதற்கான கடைகள் மட்டுமே தற்போது திறந் திருக்கின்றன. ஊரடங்கின் எதிரொலி யாக சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பொருளாதார ரீதியாகக் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட் டிருக்கும் பல்வேறு தரப்பினருக்கும் அரசு சார்பில் உதவிகள் வழங்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை, நடுத்தர குடும்பத்தார்கள் பயன்பெறும் வகையில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள்களான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவை ஏப்ரல் மாதம் முதல் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. இது தொடர்ச்சியாக மே, ஜூன் மாதங்களிலும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அறிவித்துள்ளார். இந்நிலையில், ஊரடங்கு காலத்தில்  பணிபுரியும்  நியாயவிலைக் கடை ஊழியர் களுக்கு செலவினமாக நாளொன்றுக்கு 200 ரூபாய் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு  அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாகத் தமிழ்நாட்டில் உள்ள 34 ஆயிரம்  நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் 24 ஆயிரம் பணியாளர்கள் பயன் பெறுவார் கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.