tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

 வேந்தராகிறார் முதல்வர்!

தமிழ்நாடு பல்கலை., சட்டத்திருத்தம் (2-வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால் ஆளுநருக்கு பதிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார். அதன்படி தமிழ்நாடு டாக்டர் அம்பேத் கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல் கலைக்கழகம், தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழ கம், தமிழ் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக் கழகம் ஆகியவற்றின் வேந்தர் பொறுப்புகளில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக நீக்கப்பட்டார்.  எல்லையற்ற மகிழ்ச்சி! தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒன்றியத்தில் ஆட்சி செய்யும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பாராட்டி பேசியதை தொடர்ந்து, நன்றி தெரிவித்து உரையாற்றிய முதல மைச்சர்,“உச்ச நீதிமன்றத்தின் மூலமாக நாம் பெற்றிருக்க க்கூடிய தீர்ப்பை வரவேற்று நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறோம்.   நமது அரசமைப்புச் சட்டத் தில் மாநில சட்டமன்றங்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கக் கூடிய உரிமைகளை நிலைநாட்டியதற்கு, தமிழ்நாடு அரசின் சார்பிலும், அனைத்து சட்டமன்ற உறுப்பி னர்கள் மற்றும் நம்மைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்கள் அனைவர் சார்பிலும் என்னுடைய மனமார்ந்த நன்றியை உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கி றேன் என்றும் நமது கொள்கையில் நிச்சயமாக, உறுதியாக இருப்பேன், இருப்பேன் என்று முதலமைச்சர் கூறியதும் அதிமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சி உறுப்பினர்களைத் தவிர, மற்ற அனைவரும் மேசையைத்தட்டியும் எழுந்து நின்றும் பலத்த கரவொலி எழுப்பினர். அப்போது, மகிழ்ச்சி வெள்ளத்தில் மதிழ்ந்த முதலமைச்சரும் மேசையை தட்டி வரவேற்றார்.  குடிநீர் திட்டம்  தமிழ்நாடு சட்டசபை பேரவை கேள்வி நேரத்தின் போது தளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமசந்திரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “ஓகேனக்கல் 2-வது கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ. 8 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. இதற்கு ஜெய்கா நிதி உதவி பெற்ற உடன் டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்படும். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை பொறுத்த வரையில் 2023 ஆம் ஆண்டு தான் 130 எம்.எல்.டி. கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது 130 எம்.எல்.டி. தண்ணீர் கிடைத்து தண்ணீர் போதவில்லை. இன்னும் 6 மாதத்திற்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதும் பாதுகா ப்பான குடிநீர் வழங்கப்படும்”என்றார்.  மார்ஷல் நேசமணி பெயர்  கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பேருந்து  நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயரை வைக்க அரசு  முன்வருமா என்று விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பெர்ட் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, “தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் முதலமைச்சர் அனுமதி பெற்று பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்ப டும்” என்றார்.  3 நாட்கள் தரிசன கட்டணம் ரத்து  சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் கிருஷ்ண சாமி எழுப்பிய கேள்விக்கு விடையளித்த அமைச்சர் பி.கே. சேகர்பாபு,“அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டா டப்படுகிறது. அந்த வகையில், பங்குனி உத்திர திரு விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் வரும் 10,11,12 ஆகிய 3 நாட்கள் கட்டண தரிசனம் ரத்து செய்யப் படுகிறது”என்றார்.  ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் கிடைக்குமா?   பெண்களுக்கு விடியல் பயணம் கொண்டு வந்ததை போன்று ஆண்களும் பேருந்தில் இலவசமாக பயணிக்கும் திட்டம் கொண்டுவரப்படுமா ? என்று திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர், “ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் குறித்த ஆர்வம் வரவேற்கத்தக்கது. பெண்கள் ஒடுக்கப்பட்ட வர்களாக இருந்தார்கள். இதனால் பெரியார் கொள்கை களின் பெண்களை மேம்படுத்த இலவச பயணம் வழங்கப் படுகிறது. அரசின் நிதிநிலை சீராகும் பொழுது ஆண்களு க்கும் விடியல் பயணம் வழங்க பரிசீலிக்கப்படும்”என்றார்.  பாம்பு கடி தடுப்பூசியால்  34,859 பேர் பயன் திமுக உறுப்பினர் க.சிவகாமசுந்தரி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணி யன்,“பாம்பு கடிக்கு அந்தந்த துணை சுகாதார நிலை யங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து  இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், 34,859 நபர்கள் பாம்பு கடிக்கு தடுப்பூசி போடப்பட்டதால் உயிர்  பாதுகாக்கப்பட்டது. மேலும், 9 லட்சத்து 60 ஆயிரத்து  85 நபர்களுக்கு நாய்க்கடிக்கு தடுப்பூசி போடப்பட் டுள்ளது”என்றார்.  காவி உடைக்கு மாறவில்லை...  சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.8) கேள்வி நேரம் முடிந்ததும், சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி  ஒளிபரப்பு அதிமுக உறுப்பினர்கள் பேசுவதை காட்டா மல் இருட்டடிப்பு செய்வதாக  எடப்பாடி பழனிசாமி  குற்றம் சாட்டினார். இதற்கு விளக்கம் அளித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு,“இந்த குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு  மாறானது. அனைத்து நிகழ்வுகளையும் நேரடியாக ஒளி பரப்பு செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது”என்றார். இதையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது பேசிய முதலமைச்சர்,“  நல்ல வேளை அதிமுகவினர் காவி உடையில் வராமல் கருப்பு சட்டையில் வந்துள்ளார்கள்”என்றார். அப்போது சிரிப்பலை எழுந்தது. எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.702 கோடி சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ.702 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கு ஒரு சட்ட மன்ற உறுப்பினருக்கு தலா ரூ.3 கோடி வீதம் ரூ.702 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.