tamilnadu

ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஏப்.10- தமிழகத்தில், வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக இயல்பை விட வெப்பம் அதிகமாக இருந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை,திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் வியாழனன்று (ஏப். 11) இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், ஆயக்குடி மற்றும் தென்காசியில் தலா 1 செ. மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள் ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.