செய்யாறு, அக்.8- புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம் பரை தெருக்கூத்து மன்றம் கலைமாமணி கண்ணப்ப தம்பிரானின் 16ஆம் ஆண்டு நினைவு நாடகக் கலைவிழா மற்றும் கண்ணப்ப தம்பி ரான் நினைவு வாழ்நாள் சாத னையாளர் விருது வழங்கும் விழா செய்யாறு அருகில் உள்ள புரிசை கிராமத்தில் உள்ள கூத்து மேடையில் துவங்கியது. செய்யாறு ஐடிஐ தாளாளர் இரா.லோக நாதன் தலைமையில் நடை பெற்ற இவ்விழாவில் கண் ணப்பகாசி வரவேற்றார். விழா துவங்கும் முன் வைகறை கோவிந்தன் கிரா மிய மண்மணம் கமழும் இசைப்பாடல்களும்,கதை சொல்லி சதீஷின் புரிசை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் குழந்தைகள் நாடகம் நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக கலை மாமணி கண்ணப்ப தம்பி ரான் வாழ்நாள் சாதனையா ளர் விருது தஞ்சை ஆர்சுத்திப் பட்டைச் சார்ந்த மூத்த தெருக்கூத்துக் கலைஞர் வி.கிருஷ்ணசாமிக்கு (84) நாடக செயல்பாட்டாளர் அ. மங்கை வழங்கி கவுர வித்தார். தில்லி பல்கலைக் கழகத்தின் நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கி யத்துறை முன்னாள் துறைத் தலைவர் பொற்கிழியும் நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பித்தார். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு,கவிஞர் ஆரி சன் தமுஎகச மாவட்டத் தலைவர், திருவண்ணா மலை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கே.எஸ்.கருணா பிரசாத் நிகழ்வினை ஒருங்கி ணைத்துப் பேசினார். பின்னர் களரி மக்கள் பண்பாட்டு மையத்தின் கிராமிய இசை மற்றும் நடன நிகழ்வு அரங்கேறியது. இந்தியா நாஸ்ட்ரம் தியேட் டர் புதுச்சேரியின் குட்டி இள வரசன் நாடகமும்,சென்னை ஜெய்பீம் நாடக மன்றம் மற்றும் கட்டியங்காரி நாட கக்குழுவினரின் மஞ்சள் நாட கமும் நிகழ்த்தப்பட்டது.செல்லம் கலாலயாவின் காவேரி நாடகமும், இறுதி யாக புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து மன்றத்தின் சிலம்புச் செல்வி தெருக் கூத்தும் அரங்கேற்றம் செய் யப்பட்டது.அனைவருக்கும் கலைமாமணி கண்ணப்ப சம்பந்தன் நன்றி கூறி விழா வினை நிறைவு செய்தார்.