tamilnadu

img

ஈரான் உயர் தலைவர் அயதுல்லா காமேனி படுகொலை அமெரிக்கா - இஸ்ரேல் துவக்கியுள்ள போரால் மத்திய கிழக்கில் பெரும் கொந்தளிப்பு

ஈரான் உயர் தலைவர் அயதுல்லா காமேனி படுகொலை அமெரிக்கா - இஸ்ரேல் துவக்கியுள்ள போரால் மத்திய கிழக்கில் பெரும் கொந்தளிப்பு

டெஹ்ரான், மார்ச் 1 - மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அரசியலை  அடியோடு மாற்றியமைக்கும் வகையில், ஈரா னின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.  அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான பிரச்ச னையில் ஓமன் நாட்டின் முன்னெடுப்பில் நடை பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் ஒரு  முக்கிய உடன்பாடு எட்டப்பட்ட அடுத்த 24  மணி நேரத்திற்குள், எவ்வித முன்னறிவிப்பு மின்றி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் உலக நாடு களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2026  பிப்ரவரி 28 அன்று அதிகாலை தொடங்கி நடத் தப்பட்ட இந்த ஏகாதிபத்திய நடவடிக்கையில், காமேனி உட்பட ஈரானின் 40-க்கும் மேற்பட்ட உயர்மட்ட இராணுவ மற்றும் அரசியல் தலை வர்கள் கொல்லப்பட்டதை ஈரான் அரசு ஞாயிற்றுக் கிழமை காலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. சமாதான முயற்சி புறக்கணிக்கப்பட்ட பின்னணி இந்தத் தாக்குதலுக்குச் சரியாக 24 மணி நேரத்திற்கு முன்பு, அதாவது பிப்ரவரி 27 அன்று,  ஓமன் வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்-புசாய்தி  ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறி விப்பை வெளியிட்டார். அதில், ஈரான் தனது அணு கனிமத்தை இனி சேமித்து வைக்கப் போவ தில்லை என்றும், சர்வதேச அணுசக்தி முகமை யின் (IAEA) முழுமையான கண்காணிப்பை ஏற்றுக் கொள்வதாகவும் உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், இந்த இராஜதந்திர வெற்றியைப் புறந்தள்ளிவிட்டு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தலைமையி லான அரசுகள் ஈரானின் அணு ஆயுதக் கனவை வேரறுப்பதாகக் கூறி தாக்குதலைத் தொடங்கின. 2025 ஜூன் மாதம் நடைபெற்ற போரின் தொடர்ச்சி யாகவே இது பார்க்கப்படுகிறது. 2026 ஜன வரி 8-10 தேதிகளில் ஈரானில் நடைபெற்ற மக்கள் எழுச்சியும், ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் டேங்கர் கப்பல்களைக் கைப்பற்ற ஈரான் முயன்றதும் அமெரிக்காவின் இந்த  அதிரடித் தாக்குதலுக்குக் காரணமாக ஏகாதி பத்தியத்தின் தரப்பில் நியாயப்படுத்தப்படு கிறது. ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ மற்றும் ‘ரோரிங் லயன்’ தாக்குதல் விபரம் அமெரிக்கா இந்த நடவடிக்கைக்கு “ஆப ரேஷன் எபிக் ஃபியூரி” (Operation Epic Fury) என்றும், இஸ்ரேல் “ஆபரேஷன் ரோரிங் லயன்” (Operation Roaring Lion) என்றும் பெயரிட்டன. பிப்ரவரி 28 சனிக்கிழமை அதிகாலை 1:15 மணி யளவில் (டெஹ்ரான் நேரம் காலை 9:27 மணி) முதல் தாக்குதல் தொடங்கியது. இஸ்ரேல் தனது வரலாற்றிலேயே இல்லாத வகையில் 200 போர் விமானங்களை ஒரே நேரத்தில் ஏவியது. குறிப்பாக F-35I ‘ஆதிர்’ ஸ்டெல்த் விமானங்கள் முன்னணியில் இருந்தன. அமெரிக்கா தனது ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ மற்றும் உலகின் மிகப்பெரிய விமானவாகன கப்பலான ‘யுஎஸ் எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு’ ஆகியவற்றைப் பயன்படுத்தி, முதல் 12 மணி நேரத்தில் மட்டும் சுமார் 900 தாக்குதல்களை நடத்தியது. ஈரானின் 31 மாகாணங்களில் 24 மாகாணங்கள் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகின. குறிப்பாக டெஹ்ரான், இஸ்பஹான், கோம், கராஜ், கெர்மான்ஷா, தப் ரிஸ் போன்ற நகரங்களில் உள்ள இராணுவ இலக்குகள், அணு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்கள் சிதைக்கப்பட்டன. இந்தப் போரில் அமெரிக்காவின் ‘LUCAS’ (லூகாஸ்) எனப்படும் நவீன டிரோன்கள் முதன் முறையாகப் பயன்படுத்தப்பட்டன. காமேனி படுகொலையும் கொல்லப்பட்டவர்களின் பட்டியலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இந்திய நேரப்படி சனியன்று நள்ளிரவு காமேனி கொல்லப்பட்டதை தமது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் ஒரு வீடியோ பதிவின் மூலம் அறிவித் தார். இதனை ஆரம்பத்தில் மறுத்து வந்த  ஈரான், ஞாயிற்றுக்கிழமை காலை அதிகாரப் பூர்வமாக உறுதிப்படுத்தியது. டெஹ்ரானில் உள்ள காமேனியின் அலுவலக இல்லமான ‘பெய்ட்-இ ரக்பாரி’ (Beit-e Rahbari) வளா கத்தின் மீது ஏழு ஏவுகணைகள் துல்லியமாகத் தாக்கியதில், 86 வயதான காமேனி தனது குடும்பத்தினருடன் உயிரிழந்தார். இதனை அறி விக்கும்போது ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர், “ஈரான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புக்கு உறுதியான மலைபோல் செயல் பட்ட மேன்மைமிக்க அயதுல்லா சையது அலி  ஹுசைனி காமேனி உச்ச பரலோக ராஜ்யத்தில் இணைந்தார்” எனக் கூறி கண் கலங்கி அழுதார். இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட முக்கியத் தலைவர்கள்: அயதுல்லா அலி காமேனி – ஈரானின் உயர் தலைவர்; முகமது பாக்பூர் – புரட்சிகர காவல்படை (IRGC) கட்டளைத் தளபதி;  அஸிஸ் நஸீர்ஸாதே – பாதுகாப்பு அமைச்சர். முகமது பகேரி – ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி; அலி ஷாம்கானி – தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆலோசகர்;  அமீர் அலி ஹாஜிஸாதே – விமானப் படைத் தளபதி; ஹொசைன் சலாமி – ராணுவத் தலைவர்;  சலேஹ் அசாதி – உளவுத்துறை தலைவர்; ஹொசைன் ஜபல் அமீலியான் – அணு திட்டத் தலைவர். மேலும், காமேனியின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். 6 அணு விஞ்ஞானிகளும் கொல் லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஞ்சு உயிர்களைப் பலிகொண்ட ஹார்மோஸ்கன் பள்ளித் தாக்குதல் இந்தத் தாக்குதலில் மிகவும் இதயம் பதறச்  செய்த சம்பவம் ஹார்மோஸ்கன் மாகாணத்தில் நடைபெற்றது. மினாப் நகரில் உள்ள ‘ஷாஜரே  தயீபா’ தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 108 மாணவிகள் கொல்லப் பட்டனர். சனிக்கிழமை பள்ளி நாள் என்பதால், மாணவிகள் வகுப்பறையில் இருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த மாக ஈரான் நாடு முழுவதும் 201 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 747 பேர் காயமடைந்த தாகவும் ஈரானிய செம்பிறை சங்கம் அறிவித்துள் ளது. ஈரான் கல்வி அமைச்சகம் நாடு முழுவதும் மூன்று பள்ளிகள் தாக்கப்பட்டதில் 86 மாண வர்கள் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது. ‘உண்மை வாக்குறுதி-4’:  ஈரானின் ஆவேசப் பதில் தாக்குதல் தனது தலைவர் கொல்லப்பட்டதற்குப் பதி லடியாக, ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 4”  (Operation True Promise 4) என்ற பெயரில் பதில் தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களைக் கொண்டுள்ள பஹ்ரைன், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீ ரகம், சவூதி அரேபியா, ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகிய ஏழு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை மழை பொழிந்தது. குறிப்பாக ‘ஃபத்தா’ வகை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் இஸ்ரேலின் ‘ஆரோ’ மற்றும் ‘அயன் டோம்’ பாதுகாப்பு அமைப்புகளை மீறி  டெல் அவிவ் நகரின் மையப்பகுதியில் விழுந்து  12 பேரைக் கொன்றன. இஸ்ரேலின் முக்கிய விமான நிலையம் மற்றும் ஹைபா எரிபொருள் கிடங்குகள் சேதமடைந்தன. ஈராக்கில் உள்ள  அமெரிக்காவின் ‘அல்-அசாத்’ விமானப்படைத் தளத்தின் மீதான தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர். ஐக்கிய அரபு அமீர கத்தில் புர்ஜ் கலிபா அருகே ஏவுகணைகள் விழுந்ததால் துபாய் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இடைக்காலத் தலைமை மற்றும்  40 நாட்கள் துக்கம் 1989-ம் ஆண்டு முதல் ஈரானின் உயர் தலைவ ராக இருந்த காமேனியின் மறைவைத் தொடர்ந்து, ஈரானில் 40 நாட்கள் துக்கக்காலம் மற்றும் 7 நாட்கள் அரசு பொது விடுமுறை அறி விக்கப்பட்டுள்ளது. புதிய நிரந்தரத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை, அயதுல்லா அலிரேசா அராபி (பாதுகாப்புக் குழுவின் சட்ட நிபுணர்), ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மற்றும் தலை மை நீதிபதி குலாம்ஹொசைன் மொஹ்சேனி எஜெய் ஆகிய மூவர் அடங்கிய இடைக்காலத் தலைமை கவுன்சில் ஈரானை வழிநடத்தும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய கொந்தளிப்பும் பொருளாதார வீழ்ச்சியும் காமேனி கொல்லப்பட்ட செய்தி பரவியதும் ஈரான் நாடு முழுவதும் எரிமலைப் பிழம்பாகக் கொந்தளித்தது. தலைநகர் டெஹ்ரானில் லட்சக் கணக்கான மக்கள் திரண்டு “அமெரிக்காவிற்கு மரணம்” மற்றும் “இஸ்ரேலுக்கு மரணம்” என முழக்கமிட்டு அமெரிக்க மற்றும் இஸ்ரேலியக் கொடிகளை எரித்தனர். பாகிஸ்தானின் கராச்சி யில் உள்ள அமெரிக்கத் தூதரக முற்றுகைப் போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கிச்