போக்குவரத்து ஊழியர்களின் 15ஆவது ஊதிய ஊதிய பேச்சுவார்த்தை தொடங்கியது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களின் 15ஆவது ஊதிய பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் தொடங்கியது.
போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தலைமையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் 8 போக்குவரத்து கழக மேலான் இயக்குநர்கள், சிஐடியு, தொமுச உள்ளிட்ட 84 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.