சென்னை, ஏப்.5-
ஆசிரியர் தகுதி (டெட்) தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான கால அவகாசம் ஏப். 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. டெட் எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் கடந்த மார்ச் 15 முதல் ஏப். 5 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.8000க்கும் அதிகமான மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் கற்பிக்கும் பணியை விருப்புவர்களுக்கு இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறியிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு ஆணையம், தேர்வுக்கு விண்ணப் பிக்கும் கால அவகாசத்தை ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இணையதளம் சரியாக வேலை செய்யவில்லை என விண்ணப்பதாரர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, ஆன்லைன் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு ஆணையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.