tamilnadu

img

கோயில் நில ஆக்கிரமிப்புகள் பாரபட்சம் இல்லாமல் அகற்றப்படும்: அமைச்சர்...

ராணிப்பேட்டை:
தமிழ்நாட்டில் கோயில் நில ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இல்லாமல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இந்து சுமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில்  ஸ்ரீலட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள் ளது.  இந்தக் கோயில் சுமார் 750 அடி உயரமுள்ள செங்குத்தான பாறை மீது அமைந்துள் ளது. மொத்தம் 1,305 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும்.செங்குத்தான படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் ஏறிச்சென்று சுவாமி தரிசனம் செய்ய சிரமப்படுகின்றனர். இதனால், மலைக்கு ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண் டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. இதற்காக, பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு, ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் ரோப் கார் அமைக்கும் பணி 2014 ஆம் ஆண்டு தொடங்கியது. மிகவும் தாமதமாக நடைபெற்று வந்த இந்தப் பணி, தற்போது 90 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ளது.இந்நிலையில், இந்து சமய அற நிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் ரோப் கார் பணி களை ஆய்வு செய்ய சோளிங்கருக்கு திடீரென வருகை தந்தார்.

ரோப் கார் பணிகள் நடைபெறும் மலையடிவாரப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கோயில் நிர்வாகம் மூலம் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து, அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், ரோப் கார் அமைந்துள்ள பகுதிக்கும் பக்தர்களின் வாகனம் நிறுத்துமிடத் துக்கும் அதிக தொலைவு உள்ளதால், வாகன நிறுத்துமிடத்தை ரோப் கார் பகுதிக்கு மிக அருகில் அமைப்பது குறித்து ஆய்வு செய்யும்படி அதிகாரிக ளுக்கு அவர் உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு கூறும்போது, “சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மலைக் கோயிலுக்கு ரோப் கார் அமைக்கும் பணி முடிக்கப் பட்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்கள் பயன்பாட்டுக்கு நிச்சயம் கொண்டுவரப் படும்” என்றார். தமிழ்நாட்டில் கோயில் நில ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இல்லாமல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மலைப் பாதையில் செல்ல முடியாத பக்தர்களை டோலி மூலம் சுமந்து செல்லும் தொழிலாளர்களுக்கு ரோப்கார் திட்டம் முடிந்த பிறகு மாற்றுப் பணிகள் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.