tamilnadu

18 கட்டுப்பாடுகளுடன் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்: தமிழக அரசு....

சென்னை:
ஒரு மாதத்துக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் 18 கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மாதம் 10ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் ஊரடங்கில் திங்கட்கிழமை முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர்த்து சென்னை உள்பட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்நிலையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 18 கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்கவேண்டும் என்ற கூறப்பட்டுள்ளது.  மதுபான சில்லறை விற்பனைக் கடைகளின் அனைத்து பணியாளர்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பணியில் இருக்க வேண்டும். மதுபான சில்லறை விற் பனைக் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களில் உடல் தகுதி வாய்ந்த 55 வயதிற்கு கீழுள்ள அனைத்து பணியாளர்களும் பணியில் இருக்க வேண்டும்.  மதுபான சில்லறை விற்பனை கடைகளில் கூட் டத்தை கட்டுப்படுத்த கண்டிப்பாக தடுப்புவேலி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.மதுபானை சில்லறை விற்பனைக் கடையின் முன்புறம் மதுபானம் வாங்க வரும் நபர்களின் கூட்டத்தை இரண்டு பணியாளர்கள் வெளியில் இருந்து ஒழுங்கு படுத்த வேண்டும். மதுபானம் வாங்க வரும் நபர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். முககவசம் இல்லாமல் மதுபானம் வாங்க வரும் நபருக்கு கட்டாயம் மதுபானம் வழங்கக் கூடாது.மதுபான சில்லறை விற்பனைக் கடையின் விற்பனையினை கட்டாயம் மாலை 5 மணிக்குள் முடித்திருக்க வேண்டும் உள்ளிட்ட 18 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.