tamilnadu

தொற்று குறைந்ததால் டாஸ்மாக் கடைகள் திறப்பு: அமைச்சர் தகவல்....

சென்னை:
கொரோனா தொற்று குறைந்ததாலேயே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னை, கோயம்பேடு மார்க்கெட் டில், வியாபாரிகளுக்கு கொரோனா தடுப் பூசி செலுத்தும் முகாமை சனிக்கிழமை யன்று (ஜூன் 12) அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சரிடம், அரசு மதுபான கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த அமைச்சர், “கொரோனா முதல் அலையின்போது தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் அப்போதைய அரசு டாஸ்மாக் கடைகளை திறந்துவைத்தது.இப்போது, தொற்று எண்ணிக்கை குறைந்து தொற்றே இல்லை என்கிற நிலையை எட்டும் சமயத்தில்தான் அம்மாதிரியான முடிவை வருவாய்த்துறை எடுத்திருக்கிறது. முதல் அலையின்போது அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கும் இரண்டாம் அலையின்போது இந்த அரசு எடுப்பதற்கும் உண்டான பாகுபாடுகளை உணர வேண்டும்” என்றார்.