districts

img

அழியும் நிலையிலுள்ள கலைகளை ஆவணப்படுத்த நடவடிக்கை அமைச்சர் தகவல்

தஞ்சாவூர், டிச.16-  அழியும் நிலையிலுள்ள கலைகளை ஆவணப்படுத்துவதற்கான நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என  தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின் னணு சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பல்கலைக்கழக மொழியி யல் துறை, பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம், இந்திய மொழிகளின் நடுவண் மையம் ஆகியவை சார்பில் நடைபெற்ற 21 ஆவது தமிழ் இணைய மாநாட்டின் தொடக்க விழாவில் இணைய வழி யில் பங்கேற்ற அவர் மேலும் பேசிய தாவது: பழங்கால கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகள், இலக்கிய, வரலாறு, பண் பாடு, நாகரீகம் சார்ந்த பல ஆவணங் கள் நம்மிடம் உள்ளன. இவற்றை யெல்லாம் பாதுகாத்து அடுத்த தலை முறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய  சவால் நமக்கு இருக்கிறது. இவற்றை  செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக தஞ்சாவூர் தமிழ்ப்  பல்கலைக்கழகம், பெரியார் மணி யம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மேலும், அயலகத் தமிழர்கள் அதிக அளவில் பங்களிப்பு செய்கின்றனர். தமிழக அரசு, தமிழ்த் தொடர்பு மையத்தை அமைத்து வருகிறது. உல கில் பல்வேறு இடங்களில் இதுவரை  128 தமிழ்த் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நமது கலை கள் அழிந்துவிடாமல் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு தர வேண்டும்  என்பதில் இந்த அரசு உறுதியாக இருக் கிறது.  இதன் அடிப்படையில் சிலம்பாட் டம், நாட்டியம், நடனம், இசை, தெருக் கூத்து உள்ளிட்ட அழியும் நிலையில் இருக்கக்கூடிய கலைகளை ஆவணப் படுத்தும் பணியை மேற்கொண்டு உள்ளோம். தேவாரம், திருவாச கத்தைப் பாரம்பரியமிக்க ஓதுவார்களைக்  கொண்டு பாடச் செய்து தொகுப்பாக் கப்படுகிறது. இணையதளத்தில் யார் வேண்டு மானாலும் எளிய முறையில் அப்பா டல்களை விளக்கவுரைகளுடன் கேட்கும் நிலை உருவாகும். பல்வேறு  சமயங்களைச் சார்ந்த திருத்தலங்களில்  இருக்கக்கூடிய அற்புதமான கலை,  போதிக்கப்பட்ட சித்தாந்தங்களை ஆவ ணப்படுத்து கிறோம். வெளிநாடுகளி லிருந்து வரக்கூடிய ஆய்வாளர்கள் நேரில் வந்து பார்ப்பதில் சிரமம் இருப்ப தால், கணினி மூலம் மெய்நிகர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உலகத் துக்குக் கொடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கற்றல், கற்பித்தல் திட்டத்தில் நிக ழாண்டு முதுநிலைப் பட்டம் வழங்க வுள்ளோம். அதற்கான பாடத்திட் டத்தை தயாரிக்கும் பணி நடைபெறு கிறது. இப்பணி வருகிற மே மாதத்துக் குள் முடிவடைந்துவிடும். தமிழில் பிழையின்றி எழுதுதல் குறித்த குறுகிய  காலப் பயிற்சி திட்டத்தின் கீழ் பாடங் களை எழுதி, மீளாய்வு செய்யப்பட்டு வழங்கப்படும். புதிய தமிழ் இளங்கலைப் பட்டப் படிப்புக்கான பாடங்களை எழுதும் பணி  நடைபெறுகிறது.

முதுகலைத் தமிழ்ப் பட்டப்படிப்புக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர், மாநாட்டு மலரை தமிழ்ப் பல் கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் வெளியிட, பல்கலைக் கழகப் பேரவை உறுப்பினரும், பெரம்ப லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பின ருமான ம. பிரபாகரன் பெற்றுக் கொண்டார். பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செ.  வேலுசாமி, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத் தலைவர் (இலங்கை) த.தவரூபன், நிர்வாக இயக்குநர் (இந்தியா) இரா.பொன்னு சாமி, மாநாட்டுத் தலைவர் அப்பாசாமி  முருகையன், துணைத் தலைவர் வாசு ரெங்கநாதன், தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறைத் தலைவர் ப.  மங்கையற்கரசி உள்ளிட்டோர் பேசி னர். இந்த மாநாடு பெரியார் மணி யம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தில் சனிக்கிழமை (டிச.17) வரை நடை பெறுகிறது.