சென்னை, ஏப்.1- தமிழகத்தில் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுக்கு ஒருமுறை 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 22 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 22 சுங்கச்சாவடிகளின் கட்டணம் திங்களன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை வானகரம், சூரப்பட்டு, பரனூர், சிறீபெரும் புதூர், சென்னசமுத்திரம், பட்டரை பெரும்புதூர், எஸ்.வி.புரம், திண்டிவனம், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, மதுரை கப்பலூர், பூதக்குடி, திருச்சி சிட்டம்பட்டி, விருதுநகர், எட்டூர் வட்டம், நாங்குநேரி, கோவை கன்னியூர், சிவகங்கை, லெட்சு மணப்பட்டி, வெலம்பாலக்குடி, செண்பகம்பேட்டை, வேலூர் பள்ளிகொண்டா, தூத்துக்குடி வாகைகுளம், சாலைப்புதூர் ஆகிய 22 சுங்கச்சாவடி களில் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. ரூ. 5 முதல் 15 வரை சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.