தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.
மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிப்ரவரி 1-ஆம் தேதி ஒன்றிய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதனை கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசும் வரும் பிப்ரவரி மாதத்திலேயே தனது 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது.
அரசுத் துறைகளில் அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய திட்டங்கள், ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.