சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் புதிய வேகத்தில் சென்று வருகிறது. சென்னையில் பரவல் வேகம் சற்று தணிந்தாலும் மற்ற மாவட்டங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.
இந்நிலையில்,கொரோனா தடுப்பு தொடர்பான முக்கிய விவகாரங்களை செயல்படுத்த தலைமைச்செயலகத்தில் வரும் 14-ஆம் தேதி (செவ்வாய்) மாலை 5 மணிக்கு முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது மற்றும் பொது போக்குவரத்து தொடங்குவது பற்றி முக்கிய ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.