tamilnadu

img

தமிழகம்: நாங்குநேரி விக்ரவாண்டியில் இடைத்தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது.
 நாங்குநேரி தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த எச் .வசந்த குமார் நாடாளுமன்ற உறுப்பினரானார். விக்கிரவாண்டி  தொகுதி திமுக எம்எல்ஏ ராதா மணி மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து இவ்விரண்டு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
நாங்குநேரி தொகுதியில் 2,57,418 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 170 மையங்களில் 299 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. விக்கிரவாண்டி தொகுதியில் 2,23,387 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக விக்கிரவாண்டி தொகுதியில் 139 இடங்களில் மொத்தம் 275 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார், துணை ராணுவ படையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இதேபோல் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.  இதனிடையே, நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடந்து வருகிறது.