சென்னை:
கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற முந்தைய அதிமுக அரசின் கூற்று தவறானது என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்டத்தை ஆக. 13 அன்று தாக்கல் செய்துபேசுகையில் இதனை அவர் தெரிவித்தார். தமிழ் நாட்டில் நிறுவப்பட்டுள்ள மொத்த மின் உற்பத்தித்திறன் 32,646 ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின் சாரத்தை மின் சந்தைகளிலிருந்து வாங்கியே முந்தைய அதிமுக அரசு சமாளித்தது. எனவே, தமிழ்நாடு மின் மிகை மாநிலம் அல்ல என்றார்.அவரது உரையின் முக்கிய அம்சங்கள் :தேசிய அளவிலான பல்வேறு நிகழ்வுகளால் தமிழ்நாட்டின் நிதி
நிலைமை பாதிக்கப்பட்டதை வெள்ளைஅறிக்கை விவரித்தது. தற்போது நிறைவுற்ற 15 ஆவது நிதிக்குழு உட்பட, இந்தியாவின் அடுத் தடுத்த நிதிகுழுக்களின் முறைகளும் முடிவுகளும் இதில் அடங்கும். சரக்கு மற்றும் சேவை வரியுடனான கட்டமைப்பு செயல்பாட்டு சிக்கல்கள், ஒன்றிய அரசின் அதிகரித்து வரும் மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களின் பயன்பாடு அதாவது, ஒன்றிய அரசின் வரிகளில் 10 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடு வரை இரட்டிப் பாகியுள்ளது. ஆனாலும், கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு வழிகளில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்பட்டதை வெள்ளை அறிக்கையும் குறிப்பிட்டுள்ளது.
மின்னணு கொள்முதல் முறை
கோவிட்-19 பெருந்தொற்று நிர்வாக அமைப்புகளில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், எனவே, மனிதவள மேலாண்மை, அடிப்படை தரவு அமைப்புகள், தணிக்கை, கண்காணிப்புச் செயற்பாடுகள் ஆகியன முழுமையாகச் சீர்செய்யப்படும் எனவும், ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டது.அதன்படி, தரவுகளை மையமாகக் கொண்டுள்ள நிர்வாகச் சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கு அரசுதிட்டமிட்டுள்ளது. பயனாளர்கள் குறித்த போதிய அடிப்படை தரவு கிடைக்கப் பெறாத காரணத்தால், சமூக பொருளாதார நீதியை மேம்படுத்தும் அரசு நலத்திட்டங் களைத் திறம்படச் செயல்படுத்த இயலாத நிலை உள்ளது. அனைத்து மக்கள் மற்றும் குடும்பங்களின் உண்மையான பொருளாதார நிலையை நன்கு அறிய, அனைத்து துறைகளிலுள்ள தரவுகளை ஒன்றிணைப்பதற்கான முயற்சி எடுக்கப்படும்.இந்த அடிப்படை முயற்சியின் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு மானியங்கள் வழங்கப்படுவது மேம்படுத்தப்படும். கொள்முதல் செய்யும் அனைத்து துறைகளிலும் மின்னணு கொள்முதல் முறை கண் டிப்பாக பின்பற்றப்படும். அரசு கொள் முதல் முறைகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசிற்கென, தனி மின்னணுகொள்முதல் வலைதளம் ஒன்று உருவாக்கப்படும்.
வழக்கு இடர் மேலாண்மை அமைப்பு
நீதிமன்றங்களில், பல வழக்குகள் பல்லாண்டுகளாக நிலுவையில் உள்ளன. அத்தகைய வழக்குகளை இயன்ற அளவில் முனைப்புடன் திறமையாக கையாளுவதற்கும், பொறுப்புகள் அதிகரிப்பதை குறைப்பதற்கும், வழக்கு இடர்மேலாண்மை அமைப்பு ஒன்று அமைக்கப்படும்.அதன்மூலம், பொதுநலன் திறம்படப் பாதுகாக்கப்படுவதையும், அரசுக்கு வளங்கள் உடனுக்குடன் கிடைப்பதையும் உறுதி செய்யும் வகையில், வரிவிதிப்பு, நில விவகாரங்கள், பணியாளர் விவகாரங்கள் மற்றும் கொள்முதல் பிரச்சனைகள் தொடர்பான அனைத்து முக்கிய வழக்குகளும் முனைப்புடன் கண் காணிக்கப்படும்.