tamilnadu

img

கொற்றலை ஆற்றில் கட்டுமானப் பொருட்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

கொற்றலை ஆற்றில் கொட்டப்பட்ட கட்டுமானப் பொருட்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்ல கன்வேயர் அமைக்கும்போது விதிமீறியதாகவும், அனுமதித்த பாதையிலிருந்து விலகி கட்டுமான பொருட்கள் கொட்டப்படுவதாகவும் காட்டுக்குப்பம் மீனவர் செல்வராஜ் துரைசாமி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.  

விசாரணையில் எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்ல கன்வேயர் அமைக்கும் பணியின்போது கொற்றலை ஆற்றில் நீர் வழிப்பாதையில் கொட்டப்பட்ட கட்டுமான பொருட்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.  

மேலும் நீர் வழிப்பாதையில் தடை ஏற்படுத்தும் கட்டுமானப் பொருட்களை அப்புறப்படுத்தியது குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து சுற்றுச்சூழல் அனுமதி மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வராஜ் துரைசாமி என்ற மீனவர் தாக்கல் செய்த வழக்கை நவ.12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.