குழந்தைகளின் மற்றும் இளைஞர்களின் மனநிலையை பாதிக்கும் ’டிக்டாக்’ செயலிக்கு தடைவிதிக்குமாறு மத்திய அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவை தலைமையகமாக கொண்ட டிக்டாக் செயலி குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக வழக்கறிஞர் ஒருவர் தொடுத்த பொதுநல மனு ஒன்றை அளித்திருந்தார். இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தேவையற்ற விசயங்களை கொண்ட தகவலை டிக்டாக் செயலி வழங்குகிறது. இதனால் அதை தடுத்து நிறுத்தும் சமூக பொறுப்பு அரசிற்கு உள்ளது என தெரிவித்தது.
மேலும், டிக்டாக் செயலியை இந்தியாவில் பதிவிறக்கம் செய்யவும், அதில் வரும் வீடியோக்களை ஊடகங்கள் ஒளிபரப்பு செய்யவும் இடைக்கால தடைவிதிக்குமாறு மத்திய அரசிற்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.