தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தில்லையாடி ராஜாவின் என் வாசிப்பில் நாவல்கள் சில என்ற நூல் வெளியீட்டு விழா கடலூர் நகர அரங்கில் மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்றது. முனைவர் சா.பிரவீன் வரவேற்றார், எழுத் தாளர் நாராயணன், சிவராமன், பேராசிரியர் ஜானகி ராஜா ஆகியோர் கருத்துரை வழங்கினர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.ஜோதி நூலை வெளியிட ஓய்வூதியர் சங்கங்களின் மாநில நிர்வாகி டி.புருஷோத்தமன் பெற்றுக் கொண்டார். மாவட்ட இணை செயலாளர் என்.காசிநாதன் நன்றி கூறினார். கவிஞர் பால்கி ஒருங்கிணைத்தார்.