tamilnadu

img

தமிழ்நாடு மின்ஊழியர் ஆர்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய பதவிகளை அனுமதிப்பதில் காலதாமதம் செய்யக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் சனிக்கிழமையன்று (செப்.7) டைடல் பார்க் துணைமின்நிலயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்சென்னை கிளை-2 திட்டத் தலைவர் எஸ்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், இணைச் செயலாளர் ஏ.முருகானந்தம், திட்டச் செயலாளர் டி.அன்பழகன், பொருளாளர் ஜி.ரவி, சிஐடியு தென்சென்னை மாவட்டப் பொருளாளர் ஏ.பழனி உள்ளிட்டோர் பேசினர். இதேபோல், சென்னை மேற்கு கிளை சார்பில் திருமங்கலம் மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பட்டத்திற்கு திட்டத் தலைவர் டி.எஸ்.பார்த்தசாரதி தலைமை தாங்கினார். துணைப்பொதுச்செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், கே.அருட்செல்வன், சிஐடியு துணைத்தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம், திட்டச் செயலாளர் எல்.தசரதன் உள்ளிட்டோர் பேசினர்.