சட்டமன்ற உறுப்பினரிடம் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
காஞ்சிபுரம், மே 27- காஞ்சிபுரம் நகரம் முழு வதும் கண்காணிப்பு கேமிரா பொருத்த வேண்டும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் வலி யுறுத்தி சட்டமன்ற உறுப்பின ரிடம் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மனு அளித்த னர். பட்டு நெசவில் உலக புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோவில் நகரமான காஞ்சி புரத்திற்கு சுற்றுலா பயணி களின் வருகை, பன்னாட்டு நிறுவனங்கள், பட்டு சேலை கள் வாங்குவதற்காக பிற பகுதிகளில் இருந்து வருகிற வர்கள் என காஞ்சிபுரம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக இருக்கிறது.
பல்வேறு மாவட்ட, மாநில மக்கள் இங்கே அதி கம் வந்து செல்வதாலும், தங்கி இருப்பதாலும், உள் ளூரில் இருக்கக்கூடிய சமூக விரோதிகளின் தொடர்புகள் விரிவுபடுத்தப்பட்டு இருப்ப தாலும், தொடர்ந்து பல குற்றச் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆதலால் நகரம் முழுவ தும் கண்காணிப்பு கேமராக் கள் பொருத்த வேண்டும், போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்காக மக்கள் புழங்கக்கூடிய முக்கிய வீதிகளான காந்தி சாலை, மூங்கில் மண்டபம், காம ராஜர் வீதி, மேற்கு ராஜவீதி போன்ற பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி புதனன்று (மே 27) காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசனைச் சந்தித்து மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர்கள், மனு கொடுத்தனர்.
காஞ்சிபுரத்தில் பராம ரிப்பின்றி உள்ள அண்ணா நூற்றாண்டு சிறுவர் பூங்கா வில் இளைஞர்கள் பயன்ப டுத்தும் வகையில் உடற் பயிற்சி கூடம் அமைக்க வேண்டும், காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள பட்டு மற்றும் பருத்தி நூல் துணிகளை தமிழக அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை வேண் டும், தனியார் தறி உடமை யாளர்களிடம் உள்ள துணி களையும் கொள்முதல் செய்ய அரசிடம் வலி யுறுத்த வேண்டும், கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க பட்டுள்ள நெசவாளர் கடன் களை தள்ளுபடி செய்ய பரிந்துரைக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் சி.சங்கர் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ. முத்துக்குமார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ. வாசுதேவன், ஆர்.சௌந்தரி, நகரக்குழு உறுப்பினர்கள் கே.சங்கர். எம்.வெங்கிடே சன். ஜி.லட்சுமிபதி. இ.ராம நாதன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.