tamilnadu

மகளிர் இடஒதுக்கீடு விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மகளிர் இடஒதுக்கீடு விவகாரம் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மக்களவை மற்றும் மாநில சட்ட மன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு  வழங்க உத்தரவிடக் கோரி ஜெயா தாக்கூர் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகரத்னா, மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நாகராஜை சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு நீதி மன்றத்தை அணுக வேண்டிய நிலை இருப்பது வேதனையானது. மகளிர் இட  ஒதுக்கீட்டுக்கான தொகுதி வரையறை கள் செய்யப்படவில்லை. தரவுகளும் சேகரிக்கப்படவில்லை” என வாதிட்டார். அப்போது உச்சநீதிமன்ற நீதிபதி கள், “இட ஒதுக்கீட்டு சட்டத்தை செயல்  படுத்துவது அரசின் பொறுப்பு. அரசி யலமைப்பின் முகவுரையில் அரசியல்  மற்றும் சமூக சமத்துவம் வலியுறுத்தப் பட்டுஉள்ளது. நாட்டில் மிகப்பெரிய சிறுபான்மையினர் பெண்கள்தான். சமூகத்தில் 48% இருக்கும் பெண்களின் அரசியல் சமத்துவம் தொடர்பானது. எப்போது தொகுதி வரையறை செய்  யப்படும்?” என்று கேள்வி எழுப்பி ஒன் றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.