சென்னை:
நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கட்டப் பட்டுள்ள புதிய அரசு மருத் துவ கல்லூரிகளில் நிகழாண்டிலேயே மாணவர் சேர்க்கை நடத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தர்.கேரளத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஆலப் புழா ரயில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மக்கள் நல் வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ் ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர் (சுகாதாரம்) எஸ். மனீஷ், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், ரயில்வே கோட்ட மேலாளர் பி.மகேஷ் ஆகியேர் உடனிருந்தனர்ஆய்வுக்குப்பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுப்பிரமணியன்,“ தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என தில்லி சென்றிருந்த போது, பிரதமரிடம் நேரடியாக தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்தார். சுகாதாரத்துறை அமைச்சரிடமும் இதுதொடர் பாக வலியுறுத்தப்பட்டது. தமிழக அரசின் இந்த பெருமுயற்சியின் காரணமாக மருத்துவக் கல்லூரிகளை ஆய்வு செய்து நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப் பட்டுள்ள 4 மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள் வீதம் 600 மாணவர்களுக்கு இந்த ஆண்டே சேர்க்கை வழங்க அனுமதி அளித்துள்ளது. மீதமுள்ள 7 புதிய மருத்துவமனை கல் லூரிகளிலும் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள அனுமதி வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது” என்றார்.