districts

தஞ்சை பார்வைத்திறன் குறையுடையோர் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை ஜூன் 10 அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம்

அரியலூர், ஜூன் 7 - மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி யில் 2022 - 2023 ஆம் கல்வி யாண்டிற்கான 1 ஆம் வகுப்பு  முதல் 12 ஆம் வகுப்பு வரை  மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக் கிறது.  மேலும் இப்பள்ளியில் அரசால் வழங்கப்படும் கல்வி உபகரணங்கள், சீருடை,  காலணி, பிரெய்லி புத்த கங்கள் மற்றும் கணித உபக ரணங்கள் போன்றவை விலையில்லாமல் பெற்றுத் தரப்படுகிறது. நடைப் பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டி கள், நடனம், கராத்தே, யோகா, சிலம்பம் போன்ற  இதர கலைகள் கற்பிக்கப்படு கின்றன.  மாணவர்களுக்கு மாதந் தோறும் மருத்துவப் பரி சோதனை செய்யப்படுகிறது. இப்பள்ளியின் விடுதியில் மாணவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு இடமும், ஆரோக்கியமான உணவு மற்றும் தூய்மையான குடி நீர் போன்றவை வழங்கப் பட்டு வருகிறது.  எனவே மேற்காணும் பார்வைத்திறன் குறையுடை யோருக்கான அரசு மேல் நிலைப் பள்ளியில் அரியலூர்  மாவட்டத்தை சார்ந்த 5 வயது முதல் 16 வயது வரை உள்ள பார்வை குறைபாடுடைய மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயனடைய ஏது வாக மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம், அறை எண்.17, தரைத்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் 10.6.2022 (வெள்ளிக் கிழமை) சிறப்பு முகாம் நடை பெற உள்ளது.  இவ்வாய்ப்பினை பார்வை குறைபாடுடைய மாணவ, மாணவிகள் பயன்ப டுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.