tamilnadu

img

ஊதிய உயர்வு அரசாணை வெளியிட கோரி போராட்டம்

திருவள்ளூர், மே 29- தூய்மை பணியாளர்களின் ஊதிய உயர்வுக்கான அரசாணையை வெளியிடக் கோரி வெள்ளியன்று (மே 29) எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு மார்ச்-16 அன்று உள்ளாட்சி ஊழி யர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர், தூய்மை காவ லர்களுக்கு 3600 ரூபாயும், டேங்க் ஆபரேட்டர்களுக்கு 1400 ரூபாயும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார். சட்ட பேரவையில் அறிவிப்பு வெளியிட்டு 75 நாட்களாகியும் அரசாணையை வெளி யிடப்படால் உள்ளது. எனவே ஊதிய உயர்வுக்  கான அரசாணையை வெளியிட வேண்டும்,  பாகல்மேடு, அத்திவாக்கம் ஆகிய ஊராட்சி களில் பணியாற்றி வரும் துப்புரவு தொழி லாளர்களுக்கு 3 ஆண்டுகளாக வழங்கப்படா மல் ஊதிய நிலுவை வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு மாதா மாதம் ஊதியம், ஒரு மாதம் சிறப்பு ஊதியம், நிலுவை யில் உள்ள 7-வது ஊதியக் குழு தொகையை  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்  கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய தலைவர் பழனி தலை மையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில், மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம், ஒன்றிய செயலாளர் ஜெ.ரமேஷ், பொருளாளர் ஆர். ஸ்டாலின், கவுன்சிலர் பி.ரவி, சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், டி.பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.