சென்னை:
பணிநிரந்தரம் கோரி வெள்ளியன்று (ஜன.29) சென்னையில் எம்ஆர்பி செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.2015ஆம் ஆண்டு மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் (எம்ஆர்பி) நடத்திய தேர்வு வாயிலாக 13 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் அனைவரையும் 2 ஆண்டுகளுக்குள் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று நியமன ஆணையில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், 2 ஆயிரம் பேர் மட்டுமே காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 11 ஆயிரம் பேர்தொடர்ந்து 14 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையி லேயே பணியாற்றுகின்றனர். இந்த எம்ஆர்பி செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க 2018ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தர விட்டும் அரசு அமல்படுத்தவில்லை.மத்திய அரசின் தேசிய கிராமப்புற சுகாதார திட்டத்தில் (என்எச்ஆர்எம்) பணிபுரியும் பிற ஊழியர்களுக்கு தமிழக அரசு காலமுறை ஊதியம் வழங்குகிறது. ஆனால் செவிலியர்களுக்கு மட்டும் வழங்கவில்லை. இந்நிலையில் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.அப்போது முழக்கமிட்ட செவிலியர்கள், கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 5 ஆயிரம் செவிலியர்களையும் சேர்த்து 16000 செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், “பிப்ரவரி மாதத்தில் 1500 செவிலியர்க ளையும் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செவிலியர்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.