சேலம், அக் 07- பாலஸ்தீனம் மீதான இனப்படு கொலையை தடுத்து நிறுத்த வலியு றுத்தி தமிழகம் முழுவதும் சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்) உள்ளிட்ட இடது சாரி கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றது. சேலம் பழைய பேருந்து நிலையம் கோட்டை பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட் டச் செயற்குழு உறுப்பினர் பொன். ரமணி, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ. மோகன், சிபிஐ (எம் எல்) மாவட்டச் செய லாளர் ஆர். வேல்முருகன் தலைமை யில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம். குணசேகரம், பி. ராம மூர்த்தி, ஐ.ஞானசௌந்தரி, மேற்கு மாந கரச் செயலாளர் எம். கனகராஜ் வடக்கு மாநகரச் செயலாளர் என். பிரவீன் குமார் சேலம் தாலுகா செயலாளர் கே.எஸ். பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.
திருப்பூர்
திருப்பூரில் இடதுசாரி கட்சிகள் சார்பில் தியாகி குமரன் நினைவ கம் முன்பாக நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.மூர்த்தி தலைமை ஏற் றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு இடதுசாரி கட்சிகளின் ஊழியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி, மாவட் டச் செயலாளர்கள் எஸ். ரவிச்சந்திரன், கே.எம்.இசாக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி
இதேபோன்று தருமபுரி பிஎஸ்என் எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் எஸ். கலைசெல்வன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ. குமார், மாநிலக்குழு உறுப்பினர் ஆர். சிசுபாலன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க் சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் மாவட் டச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட நிர்வாகி சி.முருகன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செய லாளர் காசி.தமிழ்குமரன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். உதகை நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி திடல் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஐ(எம்) தாலுகாச் செயலாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார். தாலுகா உறுப் பினர் ராஜரத்தினம் வரவேற்புரை யாற்றினார். சிபிஐ(எம்) மாவட்ட செயற் குழு உறுப்பினர் எல்.சங்கரலிங்கம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலை வர்கள் உரையாற்றினர். இதில் திராளா னோர் பங்கேற்றனர்.
ஈரோடு
இதேபோல், ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத் தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் டி.ஏ.மாதேஸ்வரன் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து, சிபிஐ தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.டி.பிரபாகரன், சிபிஐஎம்எல் மாவட்ட அமைப்பாளர் ஜெ.பி.கார்த்தி கேயன், மாநிலக் குழு உறுப்பினர் பொன்.கதிரவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.