புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தில்லியில் போராடி வரும் விவசாய சங்கங்களின் போராட்டக்குழு விடுத்த அறைகூவல்படி சனிக்கிழமையன்று (பிப்.6) சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தென்சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.