tamilnadu

img

தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அதேபோல், மீனவர்கள் பயன்படுத்திய 2 நாட்டுப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
ராமேஸ்வரம் – கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கை காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார மீனவர் கிராமங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டும் என மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன