tamilnadu

img

சென்னையிலிருந்து இரு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள்...

சென்னை;
சென்னை சென்ட்ரல்-சத்யசாய் பிரசாந்தி நிலையம் (புட்டபர்த்தி), சென்னை சென்ட்ரல்-விஜயவாடா, கொச்சுவேலி-மைசூர் வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.இதுதொடர்பாகதெற்கு ரயில்வே  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை- புட்டபர்த்தி (ரயில் நிலையத்தின் பெயர் சத்யசாய் பிரசாந்தி நிலையம்): சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 11, 18, 25 ஆகிய தேதிகளில் (வெள்ளிக் கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06073) புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு சத்யசாய் பிரசாந்தி நிலையத்தை சென்றடையும்.மறுமார்க்கமாக சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் இருந்து டிசம்பர் 12, 19, 26 ஆகிய தேதிகளில்(சனிக்கிழமைகளில்) மாலை 6.20 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06074) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.05 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.சென்னை-விஜயவாடா: சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 11-ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை (செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற நாள்களில்) காலை 7.25 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (02077) புறப்பட்டு, அதேநாள் பிற்பகல் 2.45 மணிக்கு விஜயவாடாவை சென்றடையும்.மறுமார்க்கமாக விஜயவாடாவில் இருந்து டிசம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை (செவ்வாய்க் கிழமைகளில் தவிர மற்ற நாள்களில்) பிற்பகல் 3.20 மணிக்கு சிறப்பு ரயில்(02078) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்துசேரும்.

கொச்சுவேலி-மைசூர் கொச்சுவேலியில் இருந்து டிசம்பர் 11 ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை (21 சேவைகள்) மாலை 4.45 மணிக்கு சிறப்பு கட்டண ரயில்(06316) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.20 மணிக்கு மைசூரை அடையும்.மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து டிசம்பர் 12ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை (21 சேவைகள்) நண்பகல் 12.50 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06315) புறப்பட்டு, மறுநாள் காலை 9.20 மணிக்கு சென்னைக்கு கொச்சுவேலிக்கு சென்ற டையும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த ரயில் களுக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.