tamilnadu

img

சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம் நடத்தப்படும்! - அமைச்சர் பொன்முடி

மழை வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்கள், சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம் விரைவில் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத  பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரது சான்றிதழ்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில், மழை வெள்ளத்தில் சான்றிதழ்களை இழந்தவர்கள், சான்றிதழ்கள் பெற சிறப்பு முகாம் விரைவில் நடத்தப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். சான்றிதழ்கள் இலவசமாக வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.