tamilnadu

img

வெளிமாநிலங்களுக்கு செல்லும் 28 சிறப்பு ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஜூன் 15-ஆம் தேதி முதல் சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளி மாநிலங்களில் 28 சிறப்பு ரயில்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தென் மத்திய ரயில்வேக்குட்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் சென்னை, கோவை, பெங்களூரு பகுதிகளில் இருந்து  வெளிமாநிலங்களுக்குச் செல்லும் 28 சிறப்பு ரயில்கள் (இரு மார்க்கமாகவும்) ஜூன் 15-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை எழும்பூா் - விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் கோடைக் கால சிறப்பு ரயில்கள் ஜூன் 15-இல் இருந்தும் முதலும், சந்திரகாச்சி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 18-இல் இருந்தும் ரத்து செய்யப்படும்.

தாம்பரத்தில் இருந்து தன்பாத் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 16--இல் இருந்தும், பரௌணி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் ஜூன் 20-இல் இருந்தும், சந்திரகாச்சி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில்கள் ஜூன் 19-இல் இருந்தும் ரத்து செய்யப்படும். கோவையில் இருந்து பரௌணி செல்லும் வாராந்திர விரைவு ரயில் ஜூன் 18-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படும்.

மேலும், பெங்களூரில் இருந்து ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக விசாகப்பட்டினம்,  காரக்பூா், மால்டா டவுண்,  குவஹாத்தி உள்ளிட்ட  பகுதிகளுக்குச் செல்லும் சிறப்பு ரயில்கள் ஜூன் 16-ஆம் தேதியில் இருந்து ரத்து செய்யப்படும். இந்த ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.