தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்பிக்க 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்பிக்க மேலும் 3 நாட்கள் கால அவகாசத்தை நீட்டித்து டிசம்பர் 14-ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்றுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
