கடை வாடகை குறைப்பு தீர்மானம்
கடலூர் மாநகராட்சி மேயருக்கு வியாபாரிகள் நன்றி
கடை வாடகை குறைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றியதற்காக கடலூர் மாநகராட்சி மேயரை வணிகர் சங்கங்கத்தினர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையத்தில் உள்ள பெரும்பாலான கடை களுக்கு 100 விழுக்காட்டிற்கும் மேல் மாத வாடகை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஏலத்தொகையும் அதிகமாக இருப்ப தாகவும், அவற்றை குறைக்க வேண்டும் என்று வணிகர் சங்கத்தினர் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் பேருந்து நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த 2 ஆண்டு களாக காலியாக உள்ளதாகவும், மாத வாடகை கட்டாததால் கடைகளை பூட்டி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைப்ப தாகவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரி வித்திருந்தனர். இதுபற்றி மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றினார்.அதில், மாநகராட்சிக்கு நிதி நிலையை பெருக்கும் வகையில், இந்த விவகாரத்தை சுமுகமாக கையாளும் வகை யில், மாத வாடகை தொகையை மறு பரி சீலனை செய்யவும், ஏலத்தொகையை குறைத்து மதிப்பிடவும் , மாநகராட்சி மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தமிழக அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த அனைத்து வியாபாரிகளும் கடலூர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஜி.ஆர்.துரைராஜ் தலைமையில் மேயர் சுந்தரிராஜாவை சந்தித்து பாராட்டி நன்றி தெரிவித்தனர். அப்போது திமுக மாநகர செயலாளர் கே.எஸ். ராஜா, வணிகர் சங்கங்களின் பொரு ளாளர் தேவி முருகன், மாவட்ட இணை செயலாளர் சதீஷ், பகுதி செயலாளர்கள் எஸ்.கே.பக்கீரான், சரவணன், பாலாஜி மற்றும் வியாபாரிகள் உடனிருந்தனர்.