tamilnadu

கல்லூரி மாணவர்களுக்கு குட்கா விற்ற 7 பேர் கைது

சென்னை,செப்.14- சென்னை சைதாப்பேட்டை, கிண்டி பகுதிகளில் தடை செய்யப் பட்டா குட்கா பொருட்களை கல்லூரி  மாணவர்களுக்கு விற்பனை செய்தது  தொடர்பாக 7 பேரை போலீசார் கைது  செய்தனர். எம்.ஜி.ஆர். நகர், குமரன் நகர், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கிண்டி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட மாவா, புகையிலை, குட்கா உள்ளிட்ட பொருட்கள் பள்ளி  கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை  செய்யப்பட்டு வருவதாக காவல் துறைக்கு  புகார் வந்தன. இதையடுத்து தனிப்படை போலீ சார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு  வந்தனர். இந்த நிலையில் சைதாப் பேட்டை திடீர் நகர் பகுதியில் உள்ள வீட்டில் மாவா பதுக்கி வைத்து  இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சனிக்கிழமை காலை அந்த வீட்டிற்கு சென்ற போலீ சார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் மாவா பதுக்கி வைத்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கங்கை அமரன் (40), விஜய் (25)  ஆகிய இருவரையும் கைது செய்த னர். அவர்களிடம் இருந்து 65 கிலோ மாவா பொருட்கள், 3 கிரைண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கிண்டி தொழிற் பேட்டை பகுதியில் மோட்டார் சைக்கி ளில் வந்து பள்ளி கல்லூரி மாணவர்க ளுக்கு மாவா, பான் மசாலா சப்ளை செய்து வந்த ஈக்காட்டுதாங்கல் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்த பாலு, தீபக், கேசவன் ஆகிய 3பேரை யும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 கிலோ மாவா பொருட்கள் மோட்டார் சைக்கிள் 2 கிரைண்டர்கள் ரூ.33260 ரொக்கம், 2 செல்போன்கள் ஆகிய வற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போரூர் குன்றத்தூர் சாலையில் மளிகை கடை குடோனில் 4 மூட்டை களில் பதுக்கி வைத்து இருந்த 75கிலோ குட்கா பொருட்களை பறி முதல் செய்த போலீசார் கடை உரிமை யாளர் சிவராஜ் மற்றும் ஊழியர் தீபக் ஆகியோரை கைது செய்தனர்.